தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மும்மொழி கொள்கையை திமுக அரசு ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், மும்மொழி கொள்கை பற்றி தவறான தகவலைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரப்பி வருவதாகக் கூறினார்.
மேலும், 2010-ம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதே மும்மொழி கொள்கை செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020-ல் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் 5 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை திமுக அரசு ஏன் எழுப்பவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் மட்டுமே திமுக அரசு இதை ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.