டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கனிமவள கொள்ளையர்கள், மணல் மாஃபியாக்கள், கஞ்சா விற்பனையாளர்கள், கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள், பாலியல் குற்றவாளிகள், கூலிப்படை ரெளடிகள், ISIS ஆதரவு பயங்கரவாதிகள், நகர்புற நக்ஸல்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு தமிழக மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்காக போராடும் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு கைது செய்யும் திறனற்ற திமுக அரசையும், தமிழக காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.