டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சமீபத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதனை கண்டித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக பாஜகவினர் அறிவித்தனர். அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று அலுவலகத்தை முற்றுகையிட்ட திட்டமிடப்பட்டது.
அப்போது பேரணியாகச் சென்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி, அலிஷா அப்துல்லா ஆகியோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தியை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறை கைது செய்தனர். பின்னர் அவர் அருகிலுள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டார்.