டாஸ்மாக் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ற பாஜகவினரை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து சென்னை டாஸ்மாக் அலுவலகம் முன் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் அருள்நேசன் உட்பட ஏழு பேர் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். அப்பொழுது ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடி பகுதியில் போலீஸார் அவர்களை மறித்து கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.