கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல்துறை கைது செய்தனர்.
பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறை 160 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 12 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய பொன்னுசாமி மற்றும் சிந்தாமணி ஆகிய இருவரைக் கைது செய்த காவல்துறை, மேலும் மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.