ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக : காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
Oct 16, 2025, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக : காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 17, 2025, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் உட்பட பல பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்பவர்களை இந்த அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது.

ஜனநாயக வழியிலான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என எதற்கும் அனுமதியில்லை. சமூக வலைத்தளங்களில் அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள், எதிர் கருத்து தெரிவிப்பவர்கள், பதிவு போடுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதைப் பொருள்கள் புழக்கம் பள்ளி கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில், சிறைகளில் என எல்லா இடங்களிலும் பரவியுள்ளதை பார்க்கிறோம். அதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுப்பவர்களை திட்டமிட்டு காட்டிக்கொடுத்து அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நீதிமன்ற வாசலிலே கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு தரம் கெட்டு கிடக்கிறது. பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த அவலட்சண நிலையை கண்டித்து தனி மனிதரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பொதுவெளியில் பேசினால் அவர்கள் மீது கடுமையான வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை.

ஜனநாயக ரீதியாக ஆட்சியினுடைய குறைகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சியோடு திமுகவை விமர்சிக்கும் அனைவரையும் கைது செய்வது என்பது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும்.

டாஸ்மாக் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் துணையுடன் இந்த ஊழல் அரங்கேறி உள்ளது.

இதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் திமுகவின் சர்வாதிகார செயலை இந்து முன்னணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: DMKhindu munnaniDMK is running a jungle regime that is stifling the voice of democracy: Kadeshwara C. Subramaniam alleges!
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை : வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்ட விழா!

Next Post

ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு!

Related News

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies