தெலுங்கு திரைப்படம் ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி, மீண்டும் காக்கி உடையில் நடித்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ARJUN S/O VIJAYSANTHI என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகை விஜயசாந்தி மற்றும் நடிகர் கல்யாண் ராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. நேர்மையான காவல் அதிகாரியாக வலம் வரும் விஜயசாந்திக்கும், கேங்ஸ்டராக உருவெடுக்கும் அவரின் மகனான கல்யாண் ராமுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டங்களை இப்படம் விவரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.