ஐபிஎல் 2025 தொடருக்கான கே.கே.ஆர் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியா சேர்க்கப்படவுள்ளார்.
ஐபிஎல் 2025 தொடர் வரும் 22-ம் தேதி முதல் மே 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் துவக்க ஆட்டத்தில் கே.கே.ஆர் மற்றும் ஆர்.சி.பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், கே.கே.ஆர் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் சக்காரியாவை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.