உத்தரகாண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அவர் தெரிவித்த கருத்துகளால் எழுந்த சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.
இதுதொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேம்சந்த் அகர்வால் கண்ணீர் மல்க தனது ராஜினமா அறிவிப்பை தெரிவித்தார்.