‘பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளை இந்தியாவும் நியூஸிலாந்தும் ஒருங்கிணைந்து முறியடிக்கும்’ என பிரதமர் மோடி சூளுரைத்தார்.
நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஐந்து நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் நியூஸிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக இருநாடுகளும் தீரத்துடன் போராடும் என தெரிவித்தார்.
இதேபோல, இந்தியாவிற்கும் நியூஸிலாந்திற்கும் இடையே உறவுகளை வலுப்படுத்துவதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகவும் நியூஸிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.