ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள குரும்ஹீரா கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் நிலைகுலைந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த சண்டையின்போது 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.