அயோத்தி ராமர் கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி அறக்கட்டளை கடந்த 5 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய், 270 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி உட்பட கடந்த 5 ஆண்டுகளில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் 400 கோடி ரூபாய் அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அயோத்திக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், இது உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளைப் பெருக்கியுள்ளதாகவும் கூறினார்.