கேரள மாநிலம் இடுக்கி அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால், தேயிலைத் தோட்டம் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிக்காமல் புலி போக்குகாட்டி வந்தது.
மேலும் வண்டிப்பெரியார் அருகே உள்ள அரணக்கல்லில் பசு மற்றும் நாயை புலி வேட்டையாடியது. இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
மயங்கிய புலியை கூண்டில் அடைத்து தேக்கடிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, புலி திடீரென வனத்துறையினரை நோக்கி ஆக்ரோசமாக பாய்ந்தது. இதனால் வனத்துறையினர் புலியை சுட்டுக்கொன்றனர்.