சென்னை தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் பேருந்துகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் முறைகேடு குறித்து நேற்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகமூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து முன் அறிவிப்பு இன்றி இனி போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகம் பகுதியில் செல்லும் மாநகர பேருந்துகளில் செல்லும் பயணிகளை காவல்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.