செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாமண்டூர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாததால் மின் இணைப்பு, வங்கிக் கடன் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள், மாமண்டூர் வருவாய்த்துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சியரும் அவர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.