கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த நவீன் என்பவர், ஸ்ரீதரின் 10 வயது மகனை கடத்தி சென்றுள்ளார். பவானிக்கு குழந்தைய கடத்தி சென்ற அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து பேட்டியளித்த ஸ்ரீதர், துரிதமாக செயல்பட்டு மகனை மீட்டுக்கொடுத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் குழந்தை கடத்தப்பட்ட பரவிய தகவலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.