இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பனையடியேந்தல் பகுதி பள்ளியில் 2021ஆம் ஆண்டு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டடம் கட்டப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், 4 ஆண்டுகளில் அந்த கட்டடம் இடிந்து விழும் அவல நிலையில் உள்ளது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள், புதிய பள்ளி கட்டடம் கட்ட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.