முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான தேபேந்திர பிரதான் காலமானார்.
இவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அவரது இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தேபேந்திர பிரதானின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.