உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியினர் நேரில் சந்தித்தனர்.
லக்னோவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணியின் ஆலோசகர் சாகிர் கான் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.