வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
வட இந்தியாவைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளை இழிவுபடுத்துவதில் திமுக அமைச்சர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிகவும் மோசமான தமிழ் புலமை கொண்டவர் என விமர்சித்துள்ள அவர், கட்டுப்பாடற்ற மதுபான விற்பனை மற்றும் போதைப் பொருட்களால் திமுக அரசு தமிழக மக்களைப் போதையில் ஆழ்த்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழகத்தின் தொழிலாளர் பற்றாக்குறையை போக்கிய மக்களை இழிவுபடுத்தியதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அண்ணாமலை, திமுக தங்கள் செயலிழந்த பிரச்சாரத்திலும், வெறுப்பைப் பரப்புவதிலும் தங்கள் சக்தியை வீணாக்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.