பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி இந்திய மக்கள் உங்கள் ஆரோக்கியத்துக்காகவும், வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பூமி திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதற்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.