ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தபோது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாமென பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு போலந்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பர்தோஸ் விஸ்கி பாராட்டு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
உக்ரைன், ரஷ்யா போருக்குப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வுகாண வேண்டும் என்றும், பிரச்னைக்குப் போர்க்களத்தில் தீர்வு இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியதை போலந்து அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
இதேபோல உக்ரைன் பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ தாங்களும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.