மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கக் கோரி, தெலங்கானா சட்டப் பேரவை வளாகத்தில் பாரத ராஷ்டிர சமிதி மேலவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கட்சியின் எம்எல்சி கவிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சக மேலவை உறுப்பினர்கள் இருசக்கர வாகன மாதிரியைக் கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்.
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலின்போது மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப் போவதாகக் காங்கிரஸ் வாக்குறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.