கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இளம் பெண் ஒருவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைக்காடு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளிக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையைப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அதற்குத் தலைமை ஆசிரியர் குழந்தையின் தந்தை பார்க்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.