திருப்பூரில் மதுபோதையில் காவலர் ஒருவர் தனது மனைவியைக் காணவில்லை என கூறி வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்து என்பவர் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் வெளியில் மது அருந்திய நிலையில் மனைவியைக் காணவில்லை என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் மாநகர காவல் ஆணையர் தயவு செய்து தனது மனைவியை மீட்டுத் தர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும் விடுப்பு கடிதம் கொடுத்தும் காவல் ஆய்வாளர் ஆப்சென்ட் போட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய தலைமைக் காவலர் குடிபோதையில் அநாகரீகமாக வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.