கடந்த நிதியாண்டில் 120 கோடி ரூபாய் வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக அமிதாப் பச்சன் திகழ்கிறார்.
இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் அவர் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் ஷாருக்கான் 92 கோடி ரூபாய் வரி செலுத்தி 2-ஆம் இடத்தில் இருக்கிறார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் 80 கோடி ரூபாய் வரி செலுத்தி 3-ஆம் இடமும், சல்மான் கான் 75 கோடியுடன் 4-ஆம் இடமும் வகிக்கின்றனர். 81 வயதிலும் நடிகர் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.