சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில், தேநீர்க் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
ECR சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தேநீர்க் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் ஊழியர்கள் அதனை அணைக்க முயன்ற நிலையில், தீ மளமளவெனப் பரவியது. இதையடுத்து வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் உடனடியாக கடையில் இருந்து வெளியேறினர். ஒரு சில நிமிடங்களில் தேநீர்க் கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால், ECR சாலை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.