நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் என்ன ஆனது என அதிமுக எம்.பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களைவையில் உரையாற்றிய அவர், நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு தான் காரணம் என விமர்சித்தார். நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் என்ன ஆனது எனவும் தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து உரையாற்றிய தம்பிதுரை, கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 23 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் தற்போது வரை ஒரு மருத்துவக் கல்லூரி கூட தொடங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
தம்பிதுரையின் உரையால் திமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.