மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழில்பேட்டை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நகரமான கோவையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் இந்த நிறுவனங்களை, மொத்தமாக ஒரே இடத்தில் செயல்பட வைக்க தொழில்பேட்டை அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக சிறு குறு தொழில் முனைவோர் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கோவை தொழில்பேட்டைக்கான அறிவிப்பு இல்லாதது வருத்தமளிப்பதாக சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மானியக் கோரிக்கையின்போது கோவைக்கு தொழில்பேட்டையை அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.