கேரளா மாநிலம் ஒற்றப்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியர், ஜீப்பில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த லக்கிடி நேரு கல்லூரி துணை பேராசிரியர் அக்ஷய் மேனன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றார். லக்கிடி சாலை அருகே சென்ற போது எதிரே வந்த ஜீப் மீது எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பேராசிரியர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.