திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கோவையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பல்லடம் நான்கு வழிச்சாலையில் பயணித்துள்ளார். பின்னால் வந்த கார் இவர் மீது மோதிய நிலையில், அரை கிலோமீட்டர் தூரத்திற்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி தற்போது வெளியாகியுள்ளது.