கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது.
கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில் இரண்டு நாட்களாக பூரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூரம் நிகழ்ச்சியின்போது மேளதாளங்கள் முழங்க யானைகள் வலம் வந்தன.
அப்போது, திடீரென ஒரு யானைக்கு மதம்பிடித்து சாலையில் ஓடியதால் மக்கள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், நீண்ட நேர முயற்சிக்கு பிறகு பாகன்கள் யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.