கும்பகோணம் சுவாமிமலையில் வள்ளி திருமண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
4ஆம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக, வள்ளி திருமணம் நடைபெறுவது வழக்கம்.
வள்ளி திருமணத்தை முன்னிட்டு வள்ளிக்கு தந்தை வீட்டு சீதனமாக குறவர் இன மக்கள் பலவகை பழங்கள், மலர் மாலைகள், பட்டு வஸ்திரிங்கள், வாசனை திரவியங்கள், தேன் தினை மாவு உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.
பிறகு மாலை மாற்றும் வைபவமும் அதனை தொடர்ந்து ஊஞ்சலில் நலங்கு வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க வள்ளி திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.