மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 5-ஆம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகமாக நடைபெற்றது.
தெய்வானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை அடுத்து, அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.