கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மசனசெட்டி என்கிற இளைஞர், அப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள், அவரை கீழே இறங்கி வரும்படி அழுது மன்றாடியுள்ளனர். அவர்களின் பேச்சுக்குச் செவி மடுக்காத மசனசெட்டி, சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் மின் கம்பி மீது கை வைத்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.