உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையோரத்தில் இருந்த தள்ளுவண்டியில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த ஆனந்தர் என்பதும், இவர் பாப்ஷா லைன் பகுதியில் கூலித்தொழில் செய்து வருந்ததும் தெரிய வந்துள்ளது.