திருவண்ணாமலையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தை காவல்துறை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்த பெண் பக்தரை மலைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வெளிநாட்டு பெண் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைக்க முயற்சி மேற்கொள்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், புகாரின் அடிப்படையில் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கு தொடர்பான தகவல்களை செய்தியாளர்களுக்கு தெரிவிக்கக்கூடாது என எஸ்பி வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.