திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஓம் குமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், காரைக்குடியில் உள்ள ஓம் குமார் இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். அப்போது, தங்களை எந்த கட்சியினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்றும், பாஜகவைச் சேர்ந்த தாங்கள் வந்துள்ளது ஆறுதலாக உள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், கோயில் நிர்வாகம் போதி வசதிகளைச் செய்து தராததல் ஓம் குமார் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டினர்.