சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார்.
பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14ஆம் தேதி திறக்கப்பட்டது.
மார்ச் 19ஆம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ள நிலையில், நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். இருமுடி கட்டி சென்று அவர் வழிபாடு நடத்தினார்.