கோவையில் எரிந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், உயிரிழந்த பெண், வழக்கு பாறை பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை பத்மா எனத் தெரியவந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்களிடம் காவல்துறை தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.