ஒடிசாவில் சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்றும் ஜப்பான் பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆகி டோய் என்ற ஜப்பானியப் பெண், கடந்த 2022ம் ஆண்டு ஒடிசாவின் பூரி நகருக்கு வருகை தந்தார். அன்று முதல் இன்று வரை தினந்தோறும் பூரி கடற்கரையில் உள்ள குப்பைகளையும், சாலையோரம் உள்ள குப்பைகளையும் அவர் அகற்றி வருகிறார்.
இதேபோல் கடற்கரைக்கு வரும் பொதுமக்களைக் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுரை வழங்கி வரும் நிலையில், ஜப்பான் பெண்ணின் இந்த செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
















