ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மனைவியை கழுத்தைக் நெறித்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெம்ப நாயக்கன் பாளையம் அருகே மலை அடிவாரத்தில் 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை ஆண் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். தொடர்ந்து அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர் பெண்ணை மீட்டு விசாரித்ததில் இருவரும் கணவன், மனைவி என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.