சாவா திரைப்படம் வெளியாகி 33 நாட்களில் 761 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு சாவா திரைப்படம் உருவானது.
விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் 33 நாட்களில் 761 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.