விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் மீண்டும் திரையில் வெளியாகவுள்ளது.
2002ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் விஜய், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.
அதன்படி, பகவதி திரைப்படம் வரும் 21ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.