தனஸ்ரீ வர்மாவுக்கு 4 கோடியே 75 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக விளங்கும் யுஸ்வேந்திர சாஹல், நடன கலைஞர் தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020ஆம் ஆண்டு கரம் பிடித்தார்.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில், தனஸ்ரீ வர்மாவுக்கு 4 கோடியே 75 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டுள்ளார்.