ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே வீரர் தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், 23ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்திற்காக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தோனி வலைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.