சென்னை – மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்கும் நிலையில், 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக டிக்கெட் விற்பனை காலை 10.15 மணியளவில் தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.