மக்களவையில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘அட்வைஸ்’ செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.
மக்களவையில் பேசிய கரூர் எம்.பி. ஜோதிமணி ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்த போதிலும், அதைக் குறைக்க முடியவில்லை என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் தற்கொலை தொடர்பான தரவு மத்திய அரசிடம் இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநில அரசே என்சிஆர்பி தரவுகளை பராமரிப்பதாகவும், மாநில அரசுகள் போதிய தகவல் அளித்தால் மத்திய அரசால் முறையாக பராமரிக்க முடியும் என்றும் கூறினார். அத்துடன் பொறுப்புமிக்க அவையில் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக ஆராய்ந்து வந்து கருத்து தெரிவிக்குமாறு கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ‘அட்வைஸ்’ கொடுத்தார்.