திருவண்ணாமலையில் வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெங்கடேசன் என்பவர் திருவண்ணாமலையை சுற்றிக் காட்டுவதாக கூறி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக வழக்கம்போல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.