நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்பர்ஷா, கார்த்திக் ஆகியோர் சரண் அடைந்தனர்.
வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர்.
ரெட்டியார்பட்டி மலை பகுதியில் பதுங்கியிருந்த தவுபிக்கை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகவும், இதன் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்ததகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த முகமது தவுபிக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.